News
SEPTEMBER 2023
குரு உபதேசம் – 3810
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
பக்தியாலும், புண்ணிய பலத்தாலும்தான் ஞான வாழ்வு சித்திக்கும் என்பதையும், வெறும் பயிற்சிகளினாலோ, பிறர் சொல்லிக் கொடுக்க பிராணாயாமம் எனப்படும் மூச்சுக்காற்று பயிற்சியினாலோ அல்லது வேறு வேறு யோகங்களினாலோ ஞானம் பெற முடியாது என்பதையும் ஞானம் பெற யோகம் அவசியம் வேண்டும் என்றாலும் யோகம் செய்து ஞானமடையும் நிலை வாசியோகத்தில் உண்டு என்றாலும் அந்தவித வாசியோகம் முதுபெரும் ஞானத்தலைவன் வாசி நடத்திக் கொடுத்து அன்பர் தம் உடலினுள் தங்கி நடத்தப்படும் பிராணாயாமம்தான் வெற்றி பெறுமே அன்றி வெறும் பயிற்சிகளால் மனிதர்களால் ஞானம்தனை ஒருபோதும் பெறவும் முடியாது, பிறருக்கு ஞானம்தனை தரவும் முடியாது என்பதை அறியலாம்.