News
OCTOBER 2023
குரு உபதேசம் – 3838
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
மக்கள் அறிந்து ஏமாந்தாலும், அறியாமல் ஏமாந்தாலும், மக்களுக்கு தெரிந்து ஏமாற்றினாலும், தெரியாமல் ஏமாற்றினாலும் சரி, மக்களை ஏமாற்றி அரசியல் பெயரால், ஆன்மீகத்தின் பெயரால், கடவுள் பெயரால் மற்றும் லஞ்சலாவண்யங்களாய் என எவ்விதத்தில் ஏமாற்றி சேர்த்தாலும் சரி, அது பாவம் என்பதை உணர்ந்து மக்களுக்கு செலவு செய்து தாம் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடிக் கொள்ள வேண்டும் என்பதும் அவ்வாறு செய்யாமல் தமது திறமையாய், அறிவாய், தமது ஆற்றலாய் எண்ணி மக்களிடமிருந்து ஏமாற்றி பெற்ற பொருளை சுயநலத்திற்கும், தனது சொந்த வளர்ச்சிக்கும் பயன்படுத்தினால் எல்லாம்வல்ல முருகப்பெருமானின் கடுமையான தண்டனைக்கும் கண்டத்திற்கும் ஆளாவோம் என்பதையும் அறியலாம்.