News
NOVEMBER 2023
குரு உபதேசம் – 3871
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
எவரொருவர் ஞானம் வேண்டி மனஉருக்கத்துடன் காப்பார் அரங்கர் கடைத்தேற்றுவார் எம்மை என்றே மனமுருகி உண்மையுடன், மெய்யன்போடு, உளமார மனச்சலனங்களின்றி உறுதியுடன் அரங்கர் தம் திருவடிக்கே அவர் தம்மை முழுச்சரணாகதியாக ஒப்புவித்து ஞானம்தனை தேடி வந்திட்டால் வருகின்ற அவர்க்கெல்லாம் உத்தமமகாஞான யோகி பரப்பிரம்ம ஞானசொரூப சுப்ரமண்ய அரங்கர் தம்மால் ஞானம்தனை அவரெல்லாம் பெற்று ஞானசித்திதனை உறுதியாக அடைவர். ஆதலின் அரங்கனை நோக்கி ஆடாது அசையாது மனம் ஒன்றி நின்று பெறுவதை வாய்ப்புள்ளபோதே பெற்றுக் கொள்ளுங்கள் என்பதை அறியலாம்.