News
NOVEMBER 2023
குரு உபதேசம் – 3872
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
அன்பர்களே அரங்கர் குடிலை அணுகி அரங்கர் ஆசி பெற்று பெற்று அரங்கர் மனம் மகிழ நடந்து அரங்கர் வழிதனிலே தொடர தொடர தொடருகின்ற அவர்தம் ஞானப்பயணமே காப்பான பயணமாக மாறி அவர்தம் ஞானப்பயணம் அரங்கனருளால் காப்பான பயணமாகிக் கலியுகத்திலும் மாறி கலியுகத்தின் மாயைகளிலிருந்து விடுபட்டு ஞானவழி பிறழாது, மாயையினால் உண்டாகும் மனச்சலனங்களும் குழப்பங்களும் கோளாறுகளும் அவர் தம்மை அணுகிடா வண்ணம் கிட்டி திடமான அற்புத நிலையடைந்து சிறப்புகளை பெறுவார்கள்.
உறுதியுடன் சிறப்பாக குறையின்றி மிகுந்த அளவிலினிலே தர்மங்களை செய்திட செய்திட செய்கின்ற அவர்க்கெல்லாம் அவர்தம் இறுதிநாள் வரை அரங்கமகாதேசிகர் அருளாசிகள் அவர் தம்மை வழிநடத்தி சித்தி தந்தருளி அவர்தம் பயணத்திலே ஞானத்தில் முக்தியையும் உறுதியாக அடைவார்கள் என தமது ஞானசூட்சும நூல் மூலம் ஞானம் அடைந்திட அற்புதவழி உரைக்கின்றார் மகான் அல்லமாபிரபு.