News
FEBRUARY 2024
குரு உபதேசம் – 3963
முருகா என்றால், முன் செய்த பாவங்களே இதயத்தில் உருகி தியானிக்க முடியாத பலகீனத்தை உண்டு பண்ணும் என்பதை உணர்ந்து கருணையே வடிவான முருகப்பெருமான் திருவடிகளை பூசிக்க பூசிக்க வினை குறையும் என்பதை அறிவான். வினை குறைய குறைய அறிவு தெளிவடையும். அறிவு தெளிய தெளிய எது பாவம்? எது புண்ணியம்? என்று உணர்த்தப்படும். பாவம் நீங்கி புண்ணியம் பெருக பெருக கல் மனமும் கரையும்.
கல் மனம் உருகி கரைவதற்கு உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்து வருதல் வேண்டும்.