News
MARCH 2024
குரு உபதேசம் – 3976
முருகா என்றால், குரு என்றாலும் குருநாதன் என்றாலும் அது முருகன்தான் என்பதை அறிய வேண்டும். முருகப்பெருமான் அருளினை பெற விரும்புகின்றவர்கள் உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சைவ உணவை மேற்கொண்டு சிறந்த முயற்சி உடையோராய் பொருளை ஈட்டி தன்னையும் தனது குடும்பத்தினரையும் சார்ந்தோரையும் காப்பாற்றுவதோடு மட்டுமல்லாது வருகின்ற விருந்தை உபசரித்தும் தன்னை சார்ந்தோர்க்கு பாதுகாப்பாய் இருந்தும், காலை மாலை ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி என்று குறைந்தது பத்து நிமிடமேனும் நாமஜெபமாக சொல்லி மகாமந்திரத்தை உரு ஏற்றி வர வேண்டும். தொடர்ந்து சலிக்காமல் இவ்விதம் செய்து வருகின்ற மக்கள் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வார்கள்.