News
MARCH 2024
குரு உபதேசம் – 3977
முருகா என்றால், சிந்தையால் வரும் குற்றமும், செயலால் வரும் குற்றமும், சொல்லால் வரும் குற்றமும் அவரவர் இதன் முன் பல ஜென்மங்களிலே செய்திட்ட பாவத்தினால்தான் வருகின்றது என்பதை அறிந்து ஊழ்வினை அகற்ற வல்லாளனாம் முருகனது திருவருள் துணையால் இதை வெல்லலாம் என்பதை அறிந்து ஞானத்தலைவன் முருகப்பெருமான் திருவடியைப் பற்றி வினை வென்று சிந்தை, செயல், சொல் குற்றங்கள் நீங்கியும் இனி அவற்றினால் வினையேதும் ஏற்படா வண்ணம் சிந்தையும், செயலும், சொல்லும் குற்றமற்ற குணமே வடிவான குமரன் அருள் கூடி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள முருகன் திருவடியை பற்றிடலாம்.