News
MARCH 2024
குரு உபதேசம் – 3987
முருகா என்றால், உடலைப் பற்றியும் உயிரைப் பற்றியும் முழுமையாக அறிந்து உடலையும் உயிரையும் சேர்க்கின்றதான ஒரு அதிஅற்புத வேதியியல்தனையும் கண்டுபிடித்தவன் முருகனே என்பதை உணரலாம். மாபெரும் ஞான இரகசியங்கள் அடங்கிய வேதியியல் பெருந்தொகுப்பினை யாரொருவராலும் அறியவோ, சிந்திக்கவோ, கற்கவோ, கற்று தேறவோ, தேறி கடைத்தேறவோ, கடைத்தேறி முற்றுப்பெறவோ வேதியனாம் ஆதி ஞானத்தலைவனாம் ஞானத்திற்கே ஏகபோக அதிபதியாம் முருகன் அருள் இல்லையேல் அணுவளவும் முன்னேற முடியாது என்பதை உணரலாம்.