News
APRIL 2024
குரு உபதேசம் – 4012
முருகனை வணங்கிட , ஜீவதயவு, ஜீவகாருண்யம், அன்பு செலுத்தல், தயவு காட்டல், கருணை செய்தல், விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், தீயன மறத்தல், அரவணைத்தல், ஒத்து போதல் என ஜீவர்களுக்கு மகிழ்வையும், நன்மையும் பயக்கக்கூடிய அனைத்து நல்ல பண்புகளுமே முருகன்தான் என்பதை அறியலாம். ஆதலின் உலகினிலுள்ள அனைத்து நற்பண்புகளுமே முருகன் அருள்கொடைதான் அவனே நற்பண்பாய் நம்முள் தோன்றுகிறான், நற்பண்பே முருகனாயும் ஆகிறான் என்பதை அறிவதே சிறப்பறிவு அதை கற்பதே சாகாக்கல்வி.
தயவு என்பதே முருகனாகும், முருகப்பெருமானே தயவாகும்.