News
MAY 2024
குரு உபதேசம் – 4057
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், உயிர்க்கொலை செய்து புலால் உண்பது பாவம் என்பதும், உயிர்க்கொலை செய்யக் கூடாது என்பதையும் ஜீவதயவினை தரவல்லதான அன்னதானம் செய்ய வாய்ப்பையும் பெறுவதோடு, பாவசுமையிலிருந்து மீண்டு இயற்கை சீற்றங்களினால் ஏற்படுகின்ற பாதிப்பிலிருந்து தப்பித்தும் கொள்ளலாம், இயற்கை சீற்றம் ஏற்படாதவாறும் காக்கலாம். சைவத்தை கடைப்பிடிப்போர் மிகுதி ஆகஆக இயற்கை சீற்றம் இருக்காது, பருவமழை சீராக பெய்யும், நிலநடுக்கம் வராது, பூகம்பம் உண்டாகாது என்பதை அறிவதோடு முருகனது அருளை பெற்றால்தான் இவையனைத்தையும் அறிய முடியும் என்பதையும் அறிந்து கொள்ளலாம். செய்வதனைத்தும் பாவம். உயிர்க்கொலை செய்து புலால் உண்பதும் அறிவை மயக்கும் மதுவை விரும்பி உண்டு மயக்கத்தில் உழன்று பல தீமைகளை செய்வதும், திறமையாக ஏமாற்றி பிறர் பொருளை வஞ்சனையோடு அபகரித்தல், பிறரை துன்புறுத்தி மகிழ்வடைதல் என எல்லா பாவங்களையும் துணிந்து செய்தால் இயற்கை எப்படி பொறுக்கும். இயற்கை வெகுண்டு இயற்கை சீற்றம் உண்டாகி தனது கோர தாண்டவத்தை காண்பித்து தீவினை செய்வோரை தண்டிக்கத்தான் செய்யும் என்பதையும் பாவம் மிகுதியாக மிகுதியாக இயற்கையில் முரண்பாடுகள் தோன்றி மனித குலத்தை நாசமாக்கும் என்பதையும் அறிந்து கொள்ளலாம். அதே புண்ணியம் மிகுதியாக மிகுதியாக மிகுதியாக முரண்பட்ட இயற்கை கூட மனித வர்க்கத்திற்கு சாதகமாக மாறி அளவோடு பெய்து வளமோடு வாழ வைப்பதோடு பேரழிவுகள் ஏற்படா வண்ணம் அந்த இயற்கையே நமக்கு பாதுகாப்பாய் இருக்கும், செழிப்பான வளமான நாடாய் மாற்றித்தரும் என்பதையும் அறியலாம்.