News
JUNE 2024
குரு உபதேசம் – 4069
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
மனிதனாய் பிறந்தவன், தான் கற்ற ஏட்டுக் கல்வியின் பயனால் பெரிய விஞ்ஞானியாக இருக்கலாம், பெரிய அறிவாளியாக இருக்கலாம், பெரிய தொழில் அதிபனாக இருக்கலாம், ஏன் இன்னும் அநேகம் அநேகம் திறமை உடையவராய் கூட இருக்கலாம். ஆனால் முருகனை வணங்காதவர்களுடைய அறிவு பொய்யறிவு, அவனது செல்வமும் அழியக்கூடிய செல்வமே. அதுவும் தமிழனாய் பிறந்தும் ஒருவன் முருகப்பெருமானை குருவாய் தெய்வமாய் ஏற்று வணங்காமல் பல்வேறு தெய்வங்களை வணங்குவதும் அல்லது தெய்வ நம்பிக்கையே இல்லாமல் இருப்பதும் வேதனைக்குரியது. தமிழ் கடவுள் முருகனை அறியாது வாழ்வோர், கடைத்தேற வழியிருந்தும், கண்ணிருந்தும் கண்மூடி ஆழ்கிணற்றில் வீழும் குருடரைப் போல, பாழும் நரகில் வீழ்ந்து தொடர்பிறவிகளுக்கும் ஆளாகும் கொடுமையை எண்ணி வருந்துவார் முருகப்பெருமானை வணங்கினோரெல்லாம்.
முருகப்பெருமானை வணங்குவோம்! உண்மை மெய்ஞானம் பெறுவோம்!