News
JUNE 2024
குரு உபதேசம் – 4078
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், தர்மத்தின் தலைவன் முருகப்பெருமானை வணங்கி பூஜித்தால், பூஜிக்கின்ற மக்களுக்கு ஒரு போதும் துன்பம் வராது. தர்மம் செய்யும் தர்மவான்களுக்கு இடையூறு வருவது, பெறுவோரின் வினை மிகுதியைத்தான் குறிக்கிறது. கலியுக மாயையுள் ஆட்பட்டும், உயிர்க்கொலை செய்து புலால் உண்போர் தர்மம் ஏற்பதால், கலியுகத்தின் பாவச்சுமை தர்மவான்களை சிறிது துன்புறுத்தினாலும், தர்மவான்களுக்கு எந்த இடையூறும் வாராது, முருகன் காப்பான் என்பதையும் தர்மத்திற்கு வேண்டுமானால் கலியுகத்தில் இடையூறு வரலாம். ஆனால் முருகனை நம்பிய தர்மவான்களுக்கு ஜீவதயவுடைய மக்களுக்கு ஒருபோதும் இடையூறு வராது என்பதையும் அறியலாம்.