News
JUNE 2024
குரு உபதேசம் – 4085
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால் சடங்குகளை செய்வதினால் மட்டும் ஒருவர் சித்தி பெற முடியாது என்பதை எவ்வளவு வலியுறுத்தி கூறினாலும் பாவம் செய்திட்ட பாவிகளுக்கு உண்மை ஆன்மீகத்தில் நம்பிக்கை வராது. தாம் செய்வதே சரி எனும் உணர்வே மேலோங்கி நிற்கும். முன் செய்த பாவங்களால் தான் இப்படி நடக்கிறது என்பதை அறிந்து முன்செய்த பாவங்கள் தீர்ந்திட உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சைவஉணவை மேற்கொள்ள வேண்டும். மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிக்க வேண்டும். எல்லாம் தந்தருளும் ஞானத்தலைவன் முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற வேண்டும். செய்த பாவங்களுக்கு முதல் பரிகாரம் அன்னதானமே என்பதையும் பாவத்திலிருந்து நம்மை மீட்பது முருகன் திருவடியே என்றும், மேலும் பாவியாகாதிருக்க உயிர்க்கொலை தவிர்க்க வேண்டும், புலால் மறுத்து சைவஉணவை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் தெளிவாக உறுதியாக அறியலாம். அதை விடுத்து எத்தனை எத்தனை சடங்குகள் செய்தாலும், எத்தனை எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் எத்தனை எத்தனை சிவவழிபாடுகள் செய்தாலும் நாம் செய்த பாவம் தீராது என்பதையும் தெளிவாக அறிந்து கொள்ளலாம். பாவம் தீர உபாயம் முருகநாமமே என்பதையும், காலை பத்து நிமிடமும், மாலை பத்து நிமிடமும், இரவு பத்து நிமிடங்களும் முருகப்பெருமானின் திருமந்திரங்களை “ஓம் முருகா” என்றோ, “ஓம் சரவணபவ” என்றோ, “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ தீபம் ஏற்றி மந்திர உரு ஏற்றிட பாவமெல்லாம் முருகனருளால் பொடியாகிப்போகும் என்பதையும் அறியலாம்.