News
JULY 2024
குரு உபதேசம் – 4096
முருகா என்றால், முருகப்பெருமான்தான் ஒரு மனிதனுக்கு வாசி நடத்தி தரவல்ல தகுதியும், ஆற்றலும், அதிகாரமும் கொண்டவனாய் உள்ளான். அவனால் மட்டுமே வாசி நடத்தி கொடுக்க இயலும். வாசி நடத்தும் அதிகாரம் முருகப்பெருமானுக்கு மட்டுமே உண்டு என்று அறிவது சிறப்பறிவாகும். முருகப்பெருமானின் திருவடிகளை பூசித்து ஆசிபெற்ற மக்கள் இனிபிறவா மார்க்கத்தை அடைவார்கள். இவ்வுலகினிலே புண்ணியவான் என்று ஒருவன் இருந்தால் அது முருகப்பெருமானை அன்றி வேறு யாரொருவரையும் சொல்வதற்கு வாய்ப்பில்லை.