News
NOVEMBER 2024
குரு உபதேசம் 4216
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : பொறாமை குணமும், பேராசையும், அளவு கடந்த கோபமும், பிறர் மனம் புண்படும்படி பேசுதலும் ஆகிய குணக்கேடுகளெல்லாம் பல ஜென்மங்களிலே செய்திட்ட பாவங்களினாலேதான் உண்டானது என்பதை அறியலாம். மாபெரும் தன்னிகரற்ற புண்ணியவானாகிய முருகப்பெருமானின் திருவடியைப் பற்றி பூஜித்தால் பொறாமை குணம் நீங்கும், பேராசை நீங்கும், கோபம் நீங்கும், பிறர் மனம் புண்படும்படி பேசுகின்ற குணக்கேடு நீங்கிவிடும் என்பதை அறியலாம்.
இருவிழிக்கு நடுவில் இயங்கும் குகனே
கருவழி கடக்க காட்டுவான் உண்மை.
உண்மையாம் முருகனை ஓதி உணர்ந்திட
திண்மையாம் சித்தி திடமாம் அறிவு.
தாய்மை குணம் தந்த வேலனை
வாய்மையாய் போற்றியே வழிபடுதல் நலமே.
நலமாம் முருகனை நாளும் போற்றிட
பலமாம் வாழ்வு பக்குவம் உண்டாம்.
உண்டாம் வாழ்வு உயர்ந்த குணமும்
கண்டவர் கண்ட கருத்தே