News
NOVEMBER 2024
குரு உபதேசம் 4223
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : சைவ உணவை மேற்கொள்கின்ற வைராக்கியமும், முருகப்பெருமான்தான் கடவுள் என்று அறிகின்ற அறிவும், அவனது ஆசியை பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்கின்ற வைராக்கியமும் முருகனது ஆசி பெற்றால்தான் முடியும் என்பதையும் அறிந்து முருகனது ஆசியை பெற்றால் எல்லாம் கூடும் என்பதையும் அறியலாம்.
பாலன் முருகன் பாதம் பணிந்திட
காலனும் அஞ்சுவான் கண்டவர் கருத்தே.
எந்தை கந்தன் இணையடி போற்றிட
சிந்தையும் தெளியும் திடமாம் அறிவு.
பன்முகமாக பரவும் சிந்தையை
சண்முகன் திருவடி சார்தல் நலமே.