News
DECEMBER 2024
குரு உபதேசம் 4236
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : பிற உயிர்களுக்கு செய்கின்ற நன்மையே நமது ஆன்மாவிற்கு ஆக்கம் தரும் என்பதை அறியலாம். ஆன்ம ஆக்கம் கூடிட கூடிட அறிவும் மென்மையாக மாறி சிறப்பறிவாக மாறிடும். இதை முருகப்பெருமான் அருளினால் பெறலாம் என்பதையும் அறிந்து ஜீவதயவின் வழி ஆன்மாவை ஆக்கப்படுத்தி சிறப்பறிவையும் பெறலாம்.
அருளாளன் முருகனை அனுதினமும் போற்றிட
இருளெலாம் விலகி இன்பம் உண்டாம்.