News
DECEMBER 2024
குரு உபதேசம் 4238
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : கொடுக்கக் கூடிய மனமும் முருகனே, அதற்கு தேவையான பொருளும் அவனே. கிடைக்கும் புண்ணியமும் அவனே, அதனால் வருகின்ற ஜென்மத்தைக் கடைத்தேற்றும் உபாயமும் அவனே என அனைத்தும் அவனே ஆகி நின்று, தர்மத்தின் தலைவனாக விளங்கி நம்மை காப்பவன் முருகனே என்பதையும் அறியலாம்.
இருகலையும் பொருந்திட இடரேதும் இல்லை
குருவருள் பெற்றிட கூடுமே நலம்.
குகார்ப்பணம் என்று கூவியே கொடுங்கள்
பகவான் அருள் தானே வரும்.