News
DECEMBER 2024
குரு உபதேசம் 4244
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : இடகலையாகிய சந்திரகலையையும் வலது கலையாகிய சூரியகலையையும், புருவமத்தியாகிய சுழிமுனையில் செலுத்தினால் மும்மலக் கசடுகள் நீங்கி தெளிவான அறிவைப் பெற்று ஒளி தேகத்தை பெறலாம் என்று அறியலாம். இந்த வாய்ப்பை முருகன் அருளால்தான் பெற முடியும். வேறு மார்க்கமில்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
கனிவுடைய முருகனின் கழலிணை போற்றிட
துணிவு மிக உண்டாம் துணையே.
துணையாம் இணையடி தோத்திரம் செய்திட
வினைதான் என்செயும் வினையே.