News
DECEMBER 2024
குரு உபதேசம் 4247
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்: மகான் மாணிக்கவாசகர், மகான் திருஞானசம்பந்தர், மகான் ஒளவையார் போன்ற முதுபெரும் ஞானிகள் அருளிய ஞான நூல்களை படிக்கவும், படித்து நன்னெறி நடக்கவும் வாய்ப்பை அருள்வதோடு முற்றுப்பெற்ற ஞானிகளை உருவாக்கி அவர்கள் ஞானம் பெற காரணமாய் இருந்தவனும், அவர்களையெல்லாம் ஞானிகளாய் ஆக்கியவனும், அன்றும் இன்றும் என்றும் ஞானத்திற்கு தலைவனாய் இருப்பவனும் ஞானிகளை உருவாக்கி அவர்களுக்கு மரணமிலாப் பெருவாழ்வை அளித்து காத்து இரட்சிப்பதையே தொழிலாகக் கொண்டவனும் சதகோடி சூரிய பிரகாசமும் எல்லையில்லா பேராற்றலும், பெருந்தயவும் கொண்ட ஆதி ஞானத்தலைவன் ஜீவதயவே வடிவான பெருங்கருணைத்தாய் முருகப்பெருமான் நமக்கும் மனமிரங்கி தான் யார் என்பதை பக்தனுக்கு உணர்த்தி தனது திருவருளாலே தனது திருவடியைப் பற்றி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வாய்ப்பையும், சூழ்நிலையையும் அருளி நம்மையும் ஆளாக்கி நம்மையும் அவனைப் போலவே ஆக்கிக் கொள்கின்ற வாய்ப்பையும் அருள்வான்.
தேற்றமாம் முருகனின் திருவடியைப் பூஜிக்க
மாற்றமும் உண்டு மனமும் செம்மையே.
செம்மையாம் முருகனின் திருவடியை பூஜிக்க
நன்மையும் உண்டு ஞானமும் சித்திக்கும்.
சித்திக்கும் முருகனின் திருவடியை பூஜிக்க
முத்தியும் உண்டு முனையும் திறந்திடும்.