News
DECEMBER 2024
குரு உபதேசம் 4254
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : பிற உயிர்கள் படுகின்ற துன்பத்தை உணரவும், அதை நீக்கி அவ்வுயிர்களுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணுகின்ற அறிவையும், வாய்ப்பையும், வல்லமையையும் முருகனருளால் பெறலாம் என்பதை உணர்ந்து பிற உயிர்படுகின்ற துன்பத்தை நீக்கி உயிர்களின் ஆசியைப் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம். பிற உயிர் துன்பம் நீங்கி அவ்வுயிர்கள் மகிழ்ந்து வாழ்த்துகின்ற போது உண்டாகின்ற திருப்தி இன்பமே, அவ்வுயிர்களின் வாழ்த்தே, உயிர் துன்பம் நீக்கியவனுக்கு தவமாக மாறி அவனது ஜென்மத்தைக் கடைத்தேற்றும் வல்ல சக்தியாகவும் மாறி ஜென்மத்தைக் கடைத்தேற்றுகிறது.
ஆயின் ஜீவதயவே தவமாகும். ஜீவதயவே வேள்வியாகும். ஜீவதயவே நமக்கு மரணமிலாப் பெருவாழ்வையும் பெற்றுத் தருமென்றும், அந்த ஜீவதயவே தயவுடை முருகனின் தயவையும் பெற்றுத்தரும் என்பதையும் ஜீவதயவே முருகனாக ஆகி நிற்பதையும் அறிவதோடு காருண்ய கடவுள் தயவுடை முருகனின் தாள் பணிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வான். இதுவே பரம்பொருளை அடையும் மார்க்கமென்பதையும் அறிந்து கொள்ளலாம்.
பயனுடைய முருகனின் பாதம் பணிந்திட
நயனுடைய வாழ்வும் நல்கும் முத்தியே.