News
JANUARY 2025
குரு உபதேசம் 4264
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : அறிவு என்ற ஒன்று இருக்குமானால் அது முருகப்பெருமானால் தான், தோன்றக் கூடும் என்பதையும், அந்த அறிவும் இகவாழ்வியல் அறிவு என்றும், பரவாழ்வியல் அறிவு என்றும், இரண்டு வகைப்படும் என்றும், அந்த இரண்டு வகையான அறிவையும் தோற்றுவித்தவன் முருகப்பெருமானே என்றும் அறியலாம். இக வாழ்வாகிய இல்லறத்திற்கும் பரவாழ்வாகிய ஞான வாழ்விற்கும் தலைவன் முருகனே என்பதையும் அறியலாம்.
ஆகவே ஜென்மத்தைக் கடைத்தேற்ற விரும்புகின்றவர்கள் படுக்கும் போதும், காலை எழும் போதும், நடக்கும் போதும், வாகனங்களில் செல்லும் போதும், உணவு உண்ணும் போதும், குளிக்கும் போதும் என எல்லா நேரத்திலும் “ஓம் சரவண ஜோதியே நமோ நம!” என்றோ, “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ மந்திரஜெபம் ஜெபித்தால் விஷ ஜந்துக்களாலும், துஷ்ட ஜந்துக்களாலும், பேய் பூதங்களாலும், வாகனங்களினாலும், பகைவர்களாலும், பொல்லாத வறுமையாலும் வேறு வேறு வகையான இடையூறுகள் யாவையும் வராது என்பது எங்கள் அனுபவமாகும்.
தொட்டேன் முருகனை தோத்திரம் செய்திட்டேன்
விட்டே அகன்றது வினைகள் இரண்டுமே.
தகவல் தொடர்பு அனைத்தையும் சாதகமாக்கிய
பகவன் முருகனின் பாதம் பணிகுவாம்.