News
JANUARY 2025
குரு உபதேசம் 4277
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : சைவ உணவை மேற்கொள்ளவும் சைவ உணவை கடைப்பிடிக்கவும், ஜீவதயவை மேற்கொள்ளவும், ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளவும் முருகப்பெருமானே அருள் செய்வான் என்பதை அறியலாம்.
அந்தமில் இன்பம் அருளும் முருகனை
செந்தமிழால் போற்றுவார் திடமே.
பெருந்தகை முருகனை பேணியே தொழுதிட
இருவினையில்லை இடருமில்லையே.
முப்புரம் எரித்த முக்கண் மைந்தனை
தப்பின்றி பூசிக்க தானவனாமே.