News
JANUARY 2025
குரு உபதேசம் 4279
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பதான அறம், பொருள், இன்பம், வீடு பேறாகிய நான்கையும் அறியச் செய்தும், அதனை உணரச் செய்தும் அதை கடைப்பிடிக்கக் கூடிய வழிமுறையை அருளியும் அருளிக் காப்பவன் முருகப்பெருமான் ஒருவனே என்பதை அறியலாம்.
அம்மை குண்டலி அருளிய முருகனே
நம்மையும் காப்பான் என்றே போற்றுவோம்.
போற்றுவோம் முருகனின் பொன்னடி பெருமையை
ஏற்றம் பெறுவோம் என்றும் இறவா நிலையே.
அம்மை குண்டலி அருளிய முருகனே
நம்மையும் காப்பான் நாட்டையும் காப்பான்.
இடைபின் கலை நடுவே இயங்கும் சுழிமுனையை
தடையறக் கண்டிட தானவனாமே.