News
JANUARY 2025
குரு உபதேசம் 4284
முருகனை பூஜித்து ஆசி பெற்றிட்டால் :
முன்ஜென்ம பாவங்கள் முருகனருளால் நீங்க நீங்க பாவ வினைகள் நீங்கிடும், பாவ வினைகள் நீங்க நீங்க, உண்மையான அறிவு வெளிப்படும் என்பதையும் அறியலாம். ஞானிகளிடத்து நம்பிக்கையும் மரணமிலாப் பெருவாழ்வு உள்ளதையும் அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.
ஞானத்தின் தலைவன் முருகப்பெருமான்தான்.
………………
ஞானவான் முருகனை நாளும் போற்றிட
ஞானமும் சித்திக்கும் நமனும் அஞ்சுவனே.
முப்பாலும் கடந்த முதல்வன் முருகனை
தப்பாமல் பூசிக்க தானவனாமே.
கனிவுடைய முருகனின் கழலிணை போற்றிட
பணிவுடைய வாழ்வும் பக்குவம் உண்டாம்.
பக்குவம் மிக்கதோர் பழனி முருகனை
தக்க துணையென்றே சாற்றுவர் நல்லோரே.