News
FEBRUARY 2025

குரு உபதேசம் 4303
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் :
உயிர்க்கொலை செய்து புலால் உண்பது பாவம் என்பதை உணரச் செய்தும், மேலும் உயிர்களிடத்து அன்பு செய்யச் செய்தும், உயிர்களிடத்து ஆசி பெறுகின்ற அறிவையும் பெற்று, அந்த அறிவின் உதவியாலும் முருகப்பெருமான் கருணையாலும் உயிர்களிடத்து ஆசியையும் பெறலாம்.
உலக உயிர்களிடத்து ஆசி பெறுவதே தவம் என்பதையும் உணர்ந்து உயிர்களிடத்து ஆசி பெறுவதையே தவமாய் தவறாமல் செய்து ஜீவதயவை பெருக்கி, பெறுதற்கரிய பெரும் பேற்றையும் அடையலாம்.
இவை அனைத்தும் முருகப்பெருமான் கருணையினாலன்றி ஒரு அணுவும் அசையாது என்பதையும் உணரலாம்.
ஆக உயிர்களிடத்து ஆசி பெற, முதல் தடையாய் இருப்பது, உயிர்க்கொலை செய்து புலால் உண்கின்ற அசைவ உணவு பழக்கமே என்பதை உணர்ந்து, தான் நீக்கி கொள்வதோடு உலகில் உள்ள மற்றவர்களையும் இந்த கொடிய பாவத்திலிருந்து மீட்க நம்மால் ஆன முயற்சிகளை செய்ய வேண்டுமென்கிற உணர்வையும் பெறலாம்.
