News
FEBRUARY 2025

குரு உபதேசம் 4313
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் :
முருகப்பெருமானை வணங்க வணங்க, முருகனது ஆசியால் மனிதன் எடுக்கும் முடிவுகள் குற்றமுடையதாகத்தான் இருக்கும் என்றும் அதிலே உள்ள குறைகள் தெரியாது என்றும், முருகனது அருளைப் பெற்றால் அவரவர் முடிவுகளிலே உள்ள குறைகள் தெளிவாக தெரிந்து கொண்டு செயல்படலாம். முருகனது அருள் கூடினால் எல்லா செயல்களிற்கும் காரணம் முருகனின் ஆசிகளே என்றும், அவனது ஆசியால்தான் அனைத்தும் நடக்கின்ற உண்மையையும் உணரலாம். எல்லாமாகி நிற்கின்ற முருகனிடம் சரணாகதி அடைந்திட்டால் தயவுடைத் தெய்வம் முருகனே நம்மை வழிநடத்திட நாம் தர்ம ஆட்சியை நடத்திடலாம் என்பதையும் அறியலாம்.
