News
FEBRUARY 2025

குரு உபதேசம் 4314
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் :
முருகப்பெருமான் அவதாரமாக தோன்றி, கலியுகத்தை முடித்து ஞானயுகம் அமைப்பார் என்பதை அறியலாம்.
முருகப்பெருமானின் தலைமையில் வழிவழி வந்த திருக்கூட்ட மரபினராம் அகத்தியர் முதல் அரங்கர் வரை உள்ள எல்லா ஞானிகளும் ஒன்றிணைந்து இவ்வுலகை மாற்றி ஞான ஆட்சியை ஏற்படுத்துவார்கள் என்பதையும் அறியலாம்.
ஞான ஆட்சியிலே பண்புடைய முருகனின் தொண்டர்களே பங்கு பெறுவார்கள் என்றும், அந்த பண்புள்ள தொண்டர்களே இவ்வுலகை முருகப்பெருமானின் தலைமையில் ஆட்சி செய்து உலகை வழிநடத்தி காப்பார்கள் என்பதையும் அறியலாம்.
முருகப்பெருமானின் தலைமையில் தொண்டு செய்து ஞானலோகத்தில் பங்கு பெற விரும்புகின்ற தொண்டர்களெல்லாம் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும், ஜீவதயவை பெருக்க வேண்டும். தினம் தினம் காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும், இரவு 10 நிமிடமும் தவறாமல் “முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ, “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ, “ஓம் சரவண பவ” என்றோ “ஓம் முருகா” என்றோ முருகப்பெருமானை மானசீகமாக அவசியம் வழிபட்டே ஆக வேண்டும் என்றும், மேலும் மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்து ஜீவதயவை பெருக்க வேண்டுமென்றும் அறிந்து முருகனை எந்த கணமும் மறவாது, எந்த செயல் செய்யும் முன்னரும் முருகப்பெருமானே எனக்கு உணர்த்தப்பா! எனது சிந்தை, சொல், செயலிலே எம்மை சார்ந்து வழிநடத்திடுங்கள். எனது அறிவின் துணையால் செயல்பட்டால் நான் பாவியாகிவிடுவேன் எம்மை கைவிட்டுவிடாதே! என்று முருகப்பெருமானின் திருவடிகளிலே சரணடைந்து உலகப்பெருமாற்றத்தில் ஈடுபட்டாலன்றி முருகப்பெருமான் அருளைப் பெற முடியாது என்றும் தெரிந்து கொள்ளலாம்.
