News
FEBRUARY 2025

குரு உபதேசம் 4319
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் :
ஞானநூல் என்பவை ஞானியர் திருவடிகளைப் பற்றி பூஜிக்க தூண்டுவதாயும், ஞானமளிக்க வல்லதாயும் இருக்க வேண்டும். அதுவும் ஞானபண்டிதனது பெருமைகளையும் ஞானபண்டிதன் திருவடிகளைப் பற்ற ஏதுவாய் உள்ள நூல்கள் மிகவும் பயனுள்ளதாகும்.
அதிலும் மகான் அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம், திருப்புகழ், நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுபடை போன்ற நூல்கள் படிப்பது முருகனது அருளை பெற மிகவும் பயனுள்ளது என்பதும் முருகனைப் பற்றிய இந்த நூல்களை படித்து அதன்படி நடந்திட வெகுவிரைவில் ஞானமடையலாம் என்பதையும் அறியலாம்.
………………
குண்டலி சக்தியை அறிந்தவர் அவரே
அண்டத்தை ஆள்வார் அவர் நம்மவரே.
