News
MARCH 2025

குரு உபதேசம் 4333
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் :
சாதி, மத, இன, மொழி, தேச பாகுபாடற்ற சமதர்ம சிந்தையும், ஜீவதயவும், தயைசிந்தை உடையோராயும் உள்ளவர்கள்தான் முருகப்பெருமானாரால் ஆட்சி பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்க படுவாரென்றும் அத்தகைய பண்புகளை பெற, முருகனது திருவடிகளைத் தொடர்ந்து மனம் உருகி பூஜித்தாலன்றி பெறுதலரிது என்பதையும், அறிந்து முருகனது அருளைப் பெற்றாலன்றி அணுவும் அசையாது என்பதையும் உணர்ந்து எண்ணம், சொல், சிந்தை, செயல் அனைத்தும் முருகப்பெருமான் சார்ந்து வழி நடத்தினாலன்றி சிறப்பான வகையில் செயல்படமுடியாது என்பதையும் அறியலாம்.
பற்றற்ற முருகனின் பாதம் பணிந்திட
பற்றற்ற வாழ்வும் பரவாழ்வும் சித்திக்கும்.
அப்பழுக்கற்ற அருள் வடிவேலனை
தப்பின்றி பூசிக்க தானவனாமே.