News
MARCH 2025

குரு உபதேசம் 4348
முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் :
நீதியின் தலைவன், சமநீதி உடையோன், தயாநிதியும், தயவே வடிவானவனுமான முருகப்பெருமான் சர்வஆற்றல் பெற்றவன். முருகனது ஆட்சியிலே நீதி காக்கப்படும், தர்மம் காக்கப்படும், ஏழை எளியோர், பஞ்சபராரிகள், பண்புள்ளோர், பத்தினி பெண்கள், நலிவுற்றோர், பக்தர்கள் என அனைவரும் கலியுக துன்பங்களிலிருந்து முருகனருளால் மீட்கப்பட்டு கடைத்தேற்றப்படுவார்கள்.
நீதிக்கு புறம்பாக நடப்பதோ, நடக்கத் தூண்டுவதோ, இனி முருகனருளால் ஒடுக்கப்பட்டு எங்கும் சமதர்ம சமநீதி உண்டாகுவதோடு பாவிகள் அஞ்சி நடுங்கும்படியான சூழ்நிலை உருவாகும் என்பதை அறியலாம்.
………………
எந்தை நந்தனார் இணையடி போற்றிட
சிந்தையும் தெளிய சிவகதி உண்டாம்.
