News
APRIL 2025

குரு உபதேசம் 4353
முருகப்பெருமான் திருவடிகளை வணங்கி பூஜித்து ஆசிபெற்றிட்டால் :
மரணமிலாப் பெருவாழ்வை அடைய முருகனது அருள் இல்லையேல் அணுவளவும் முடியாது என்பதையும். முருகனது ஆசியையும் அருளையும் பெற வேண்டுமென்றால் உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து ஜீவதயவை மேற்கொண்டு சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும் என்பதும் தினம் தினம் காலை பத்து நிமிடமும் மாலை பத்து நிமிடமும் இரவு பத்து நிமிடமும் “ஓம் முருகா” என்றோ, “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ, “ஓம் சரவண பவ” என்றோ, “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ முருகனது மந்திரங்களை பூஜை செய்து வர வேண்டும். மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிக்க வேண்டுமென்றும் அறியலாம்.
இவ்விதம் செய்ய செய்ய புண்ணிய பலமும் அருள்பலமும் கூடி மரணமிலாப் பெருவாழ்வின் பாதையை உணர்த்தி நம்மை வழிநடத்தி மரணமிலாப் பெருவாழ்வையும் அருள்வான் முருகன்.
