News
MAY 2022
குரு உபதேசம் – 3322
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
முன்ஜென்மத்தினில் செய்த பாவ வினைகளால் பீடிக்கப்பட்டு எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும், சொற்குரு துணையால் தூண்டப்பட்டு “ஓம் முருகா” என்றோ “ஓம் சரவண பவ” என்றோ “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ மனமுருகி ஆதி ஞானத்தலைவன் முருகனது திருவடிகளைப் பற்றி சொல்லி விடுவானேயாகில், எல்லாம்வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், பிரபஞ்ச தலைவர் முருகப்பெருமானது அருள்பார்வையினால், அவனது பாவங்களெல்லாம் சூரியனைக் கண்ட பனி விலகுவது போல, விலகி அவனும் பஞ்சமாபாவியெனும் நிலையிலிருந்து உயர்ந்து புண்ணியவானாக மாறலாம்.