News
OCTOBER 2022
குரு உபதேசம் – 3473
தயவே வடிவான முருகப்பெருமான் ஆசியை பெற விரும்புகிறவர்கள் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்டு, மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தும், காலை பத்து நிமிடமும், மாலையில் பத்து நிமிடமும் முடிந்தால், இரவு பத்து நிமிடமும் “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ, “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ “ஓம் சரவண பவ” என்றோ மகாமந்திரங்களை ஜெபித்து வர வேண்டும். முருகப்பெருமான் மனமிரங்கி அருள்செய்யும் வரை, விடாது சலிப்பின்றி, சோர்வடையாமல் முன் வைத்த காலை பின் வைக்காமல் பக்தி செலுத்தி வர வேண்டும். இதுவே ஜென்மத்தைக் கடைத்தேற்ற தக்க வழித்துறையாகும். இதுவே எங்களது அனுபவமாகும்.