News
MARCH 2023
குரு உபதேசம் – 3628
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
ஆயிரம் கோடி அசுரர்களை நொடியில் அழித்து பண்புள்ள மக்களை காக்கின்ற வல்லமையுடைய வல்லவன்தான் முருகப்பெருமான். ஆயிரம் தாயினும் மிக்க தாயன்புடையவன் முருகப்பெருமான், அவன் கருணைக்கடல், தயவே வடிவானவன்தான். ஆனால் பண்புள்ள மக்களுக்கு இடையூறு செய்பவர்களை கண்டால், நொடிப்பொழுது தாங்கமாட்டான், அவன் கோபம் எல்லையில்லாமல் போய்விடும் என்பதை அறியலாம்.