News
APRIL 2023
குரு உபதேசம் – 3650
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
புலித்தோல், மான் தோல் ஆசனம் அமைத்து காவி உடுத்தி பொய் பேசி மக்களை வஞ்சித்து ஜாலம் செய்து ஏமாற்றுவான். இதுபோன்ற கபட வேடதாரிகளை இனம் கண்டுபிடிக்கலாம். போலிவேடதாரிகள் புற்று நோய் வந்தும், வேறு பல துர்மரணங்களால் இறந்து போய்விடுவார்கள் என்பதையும் அறியலாம். முருகனது திருவடியைப் பற்றி பூஜை செய்து போலி ஆன்மீகவாதிகளை இனங்கண்டு விலகிட வேண்டும். போலி வேடதாரிகளை நம்பி காலத்தையும் நேரத்தையும் இழப்பதோடு கைப்பொருளையும் இழக்கின்ற சூழ்நிலையிலிருந்தும் விடுபடலாம்.