News
JUNE 2023
குரு உபதேசம் – 3715
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
தாய் தந்தையர் இருக்கும்போது அவர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை செவ்வனே செய்து தாய் தந்தையரிடம் ஆசிபெறுவதே சிறப்பறிவு என்றும் அதை விட்டுவிட்டு வாழும் போது தாய் தந்தையர்க்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவரசெய்யாமல் தாய் தந்தையர் இறந்தபின் அவர்களுக்கு நன்மை செய்கிறேன் என்று அமாவாசை விரதம் இருப்பது போன்ற, இறந்தவர்களுக்கு செய்கின்ற சடங்குகளால் ஆன செயல்களை பேரறிவுடைய ஞானிகள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இருக்கும்போது கடமையை சரிவர செய்யாமல் இறந்தவர்களுக்காக செய்கின்ற அத்துணை சடங்குகளும் பயனற்றதாகும். இது நெல்லை விட்டுவிட்டு பதரை சேகரிப்பதற்கு ஒப்பாகும் என்பதையும் உணரலாம்.