News
SEPTEMBER 2023
குரு உபதேசம் – 3826
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
இனி வருங்காலம் முருகனின் ஆட்சி காலம் என்பதும், முருகனின் ஆட்சி காலமே ஞானயுகம் என்பதும் விளங்கும். ஞானயுகத்தின் ஞானிகள் ஆட்சியில் ஞானம் அடைவது மிக எளிது என்பதும் ஞானம் பெற எளிய கொள்கைகளை கடைப்பிடித்தாலே போதுமென்றும் ஞானிகள் ஆட்சியில் ஞானமடைதல் எளிது என்பதும் விளங்கும். தினம்தினம் தவறாமல் ஜோதி ஏற்றி வைத்து முருகப்பெருமானை ஜோதியில் தோன்றச் செய்து “ஓம் சரவண பவ“ என்றோ “ஓம் முருகா” என்றோ “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றோ நாமங்களை மனம் உருகி நாமஜெபமாகவோ மந்திர உருவாகவோ சொன்னாலே போதும், நீங்கள் ஏற்றும் ஜோதியில் முருகன் அரூபநிலையில் வெளிப்பட்டு அருள் செய்வான் என்பதை அறியலாம்.