News
NOVEMBER 2023
குரு உபதேசம் – 3884
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
எத்தனைத்தான் ஞானநூல்களை கற்றாலும், கேட்டாலும் பிறர் விளக்கம் சொல்லிட புரிந்து கொள்ள முயற்சித்தாலும், ஞானம் கற்றவர் என கூறிக் கொண்டு மனதில் தோன்றியதெல்லாம் ஞானநூல் விளக்கமாக கூறும் போலிகளின் விளக்கங்களை கேட்டாலும் மெத்த படித்த கல்வியாளர்களின் அற்புதமான மதிமயக்கும் ஞானபேச்சுகளை கேட்டாலும், சரியை, கிரியை, யோகம், ஞானம் நமக்கு அணுவளவும் பிடிபடாது என்பதையும் பரப்பிரம்ம சொரூபியான முருகன் மனம் இரங்கினால்தான் தக்க சொற்குரு மூலமாய் சற்குரு மூலமாய் யோக ஞான ரகசியங்களை உள்ளது உள்ளவாறு அறிய முடியும் என்பதை அறியலாம்.