News
FEBRUARY 2024
குரு உபதேசம் – 3946
முருகா என்றால், நாம் மேற்கொள்ளும் அந்தரங்க பூஜைக்கும் (தனித்து செய்யும் பூஜை), அன்னதானத்திற்கும் நமக்கு உற்றவர்களாய் உள்ள மனைவி, மக்கள், சகோதரர், பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர்கள் எல்லாம் தடையாய் இருந்தாலும் சரி, உதவாவிட்டாலும் சரி முருகனை வணங்கிட வணங்கிடவே முருகன் அருள்கூடி நமது ஜென்மத்தைக் கடைத்தேற்றிட தேவையான பூஜைக்கும், தானதருமங்களிற்கும் நமக்கு உதவாது முரண்பட்ட அனைவரையும் அந்த ஞானத்தலைவன் முருகனே அவர்களுள் சார்ந்து அவர்களது மனதினை மாற்றி முரண்பட்டோரையும், முரண்பாடற்றவராய் மாற்றி உதவுபவர்களாக மாற்றித் தருவான் முருகன் என்பதை உணர்வான்.