News
FEBRUARY 2024
குரு உபதேசம் – 3954
முருகா என்றால், உடம்பும் உயிரும் சேர்ந்துதான் தோன்றும் என்பதும், அது கால பரியந்தத்தில் ஒன்றைவிட்டு ஒன்று பிரிவதும் இயற்கையே என்றும், ஆனால் ஒன்றைவிட்டு ஒன்று போகாமல் தடுத்து, ஒன்றைவிட்டு ஒன்று பிரியாது சேர்ப்பதே ஞானம் என்பதை அறிவார்கள். முருகனது பேரன்பு கொண்ட அருளினால் அறிந்ததும், முருகப்பெருமானின் ஆசியால் மதியாகிய சந்திர கலையையும், விதியாகிய சூரிய கலையையும், பதியாகிய சுழுமுனையில் செலுத்துகின்ற அறிவைப் பெறலாம். மதியும், விதியும், பதியும் ஆகிய மூன்றும் முருகன்தான் என்று அறிவதே சிறப்பறிவாகும், அதுவே பேரறிவாகும், அதுவே ஞானம் என்பதுமாகும்.