News
FEBRUARY 2024
குரு உபதேசம் – 3959
முருகா என்றால், ஆதி ஞானத்தலைவன் முருகனே என்பதை அறிந்து கொள்ள முடியும், முருகனை வணங்கிய நாம், செய்த புண்ணியத்தால் பிழைத்தோம். அதை விடுத்து தண்டனைக்கு உள்ளாகி செத்துபோனவர்களையோ, செத்துப் பிறக்கின்ற மனிதர்களையோ வணங்காது, என்றும் அழிவில்லாத பிறப்பு இறப்பற்ற மரணமிலாப் பெருவாழ்வைப் பெற்ற அருள்ஜோதி வடிவினனான முருகப்பெருமானை வணங்குகிறோம்.
முதல் ஞானியாம் முருகப்பெருமான் நமக்கு தாயாக தந்தையாக வழிநடத்தும் அருள் குருவாக கடைத்தேற்றி காத்தருள் புரிகின்ற தெய்வமாக உள்ளான். அவனது அன்பின் அளவு அளவிலாது அவனது தயவு எல்லையில்லாதது. அவனே கருணைக்கடல், எல்லையில்லா ஆற்றல் பொருந்தியவன் என்றும் அழிவில்லாதவன் என்றும் மாறா இளமை உடையோன் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
அருட்பெருஞ்சோதி வடிவினனாகி நிற்கின்ற ஆறுமுகனது திருவடியை பற்றினால் அனைத்தும் கைகூடும் என்று அறியலாம்.