News
JULY 2024
குரு உபதேசம் – 4097
முருகா என்றால், நிலையில்லாததும், அழியக்கூடியதுமான இந்த உடம்பை பெற்றிருந்தாலும் என்றும் அழிவில்லாததும் அழிக்க முடியாததுமாகியதும் ஆன முருகன் திருவடியை பற்றினால் அன்றி நாம் அழிவற்ற நிலையை அடைய முடியாது என்றும், அழிவில்லாத முருகன் திருவடியைப் பற்றி வெற்றிக் கண்டிட்டால் நாமும் முருகனாக ஆகிவிடலாம் என்பதையும் முருகன் அருளால் உணரலாம்.
முருகன் ஆசி பெற்ற மக்கள் எந்த செயல் செய்தாலும் அது உயிர்களுக்கு மகிழ்ச்சியை உண்டுபண்ணுவதாக இருக்குமே தவிர உயிர்களுக்கு இடையூறு வருவதாய் அமையாது.