News
NOVEMBER 2024
குரு உபதேசம் 4232
முருகப்பெருமானை பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : காமுகனாகவும், பொருள் பற்றுடையவனாகவும் உள்ள பொய் வேடதாரிகளை இனம் கண்டு அவர்களை கட்டுப்படுத்தியும் பண்புள்ள இல்லறத்தானுக்கு உரிய பாதுகாப்பு தருவதைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
போலி வேடதாரி ஆன்மீகவாதிகளால் நாட்டில் பருவமழை தவறும், மூடப்பழக்கங்கள் நாட்டில் அதிகமாகும், உண்மையான தெய்வபக்தி குறைந்து விடும், பாவங்கள் அதிகமாகி உலகம் இயற்கையின் கோபத்திற்கு ஆளாகி உலகெங்கும் இயற்கை சீற்றங்கள் உண்டாகும் என்பதையும் அறியலாம்.
தெய்வத்தின் பெயரால் பொருளைப் பறிப்பதே குறிக்கோளாய் கொண்டும் காமுகனாய் விளங்குகின்ற இப்படிப்பட்ட போலி ஆன்மீக வேடதாரிகளை முருகன் அருளால் கட்டுப்படுத்தலாம் என்றும் முருகனது அருட்கருணையால் இவர்களை கட்டுப்படுத்திட வேண்டும் என்றும் அறிந்து உலக நலனிற்காக முருகப்பெருமானை “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றோ “ஓம் சரவண பவ” என்றோ “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ கூவி அழைத்து உலகை இக்கயவர்களிடமிருந்து காத்திட வேண்டுகோள் வைத்திட சிறப்பறிவும் கிடைக்கும்.
முருகப்பெருமானை பூஜிக்க பூஜிக்க போலி வேடதாரிகள் கட்டுப்படுத்தப்பட்டு உலகம் சுபிட்சமடையும், இயற்கையும் வளம் பெறும், நாடும் நலம் பெறும், உண்மை தெய்வபக்தி உலகெங்கும் ஓங்கும், உண்மை ஆன்மீகம் நிலைபெறும், மக்கள் தெய்வீக வாழ்வை மகிழ்வுடன் வாழ்ந்து சிறப்பார்கள் என்பதையும் அறியலாம்.
ஆதலின் உலக மக்களே தாங்கள் தங்களது பூஜையிலே உலக நலனிற்காக முருகப்பெருமானை வணங்கி போலி ஆன்மீகவாதிகளை கட்டுப்படுத்தி இவ்வுலகை காத்திட தவறாது வேண்டுகோள் வைத்தால் முருகப்பெருமான் இறங்கி அவர்களைக் கட்டுப்படுத்தி இவ்வுலகை காப்பார்.
போலி வேடதாரிகளால் நாடு நலியும்
உண்மை ஆன்மீகவாதிகளால் நாடு செழிக்கும்.