News
DECEMBER 2024
குரு உபதேசம் 4241
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : உடல் மாசு நீங்கும், உயிர் மாசும் நீங்கும், மனமாசும் நீங்கும், முருகனருளால் உடல் மாசு, உயிர் மாசு, மனமாசு ஆகிய அனைத்தும் நீங்கி தூய்மையான ஒளிஉடம்பையும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம் என்று அறியலாம்.
மாசற்ற முருகனின் மலரடி போற்றிட
ஆசற்ற வாழ்வும் அருளும் உண்டாம்.
வேலவன் திருவடியை வேண்டியே போற்றிட
காலனை வெல்ல கருத்து தோன்றுமே!
குணவான் முருகனை கூவி அழைத்திட
வனவாசம் ஏகா வாழ்வு நலமே!