News
DECEMBER 2024
குரு உபதேசம் 4249
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : பெறுதற்கரிய மானுட பிறவியை பெற்றவர்கள் நிலையில்லாததை நம்பாமல் நிலையானதாகிய பூஜையையும், புண்ணியத்தையும் அறிந்து நிலையில்லாததை நிலைப்படுத்திக் கொள்ளலாம் என்பதையும், அதையும் முருகனை பூஜித்து ஆசி பெற்றால்தான் பெற முடியும் என்பதையும் அறியலாம்.
பற்றற்ற முருகனின் பாதம் பணிந்திட
பற்றற்ற வாழ்வும் பரவாழ்வும் சித்திக்கும்.
சித்திக்கும் முருகனின் திருவடியை பூஜிக்க
முக்தியும் உண்டாம் முனையும் திறந்திடும்.
முனையும் திறந்திடும் முக்தியும் உண்டாம்
வினையும் இல்லை வெற்றியும் உண்டாம்.
உலக நன்மைக்காக அவதரித்தவன்தான் முருகப்பெருமான். முருகனது திருவடியைப் பற்றி பூஜைசெய்து ஆசி பெறுவதே சிறப்பறிவாகும். அதுவே சாகாக் கல்வியாகும். இதை அறிந்தவனே மனிதனாவான்.