News
DECEMBER 2024
குரு உபதேசம் 4257
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : சைவ உணவில் நம்பிக்கையை உண்டாக்கி கடைப்பிடித்திட வைராக்கியத்தையும் ஞானியர் திருவடி பூஜையினை தொடர்ந்து செய்திட தடைகளில்லாத வகையிலே வாய்ப்பும் வைராக்கியமும் கிடைக்கப் பெற்று அன்னதானம் செய்து ஜீவதயவை பெருக்குதற்கு வாய்ப்பையும் தந்து, அவர்கள் ஜென்மத்தைக் கடைத்தேற்றி மேல்நிலையை அடையச் செய்வான் முருகப்பெருமான்.
புருவத்திடையே பொருந்தும் கலை இரண்டால்
வருந்துவதும் இல்லை வாழ்வும் செம்மையே.
செம்மையாம் முருகனின் திருவடியை பூசிக்க
இம்மைக்கும் மறுமைக்கும் இடரேதும் இல்லை.
வளியினை வாங்கி வயிற்றில் அடக்கில்
பளிங்கு ஒத்த காயம் பழுக்கினும் பிஞ்சாம்.