News
DECEMBER 2024
குரு உபதேசம் 4260
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : வீடு பேறு என்ற மோட்ச இலாபம் உண்டென்றால் அது முருகப்பெருமானின் திருவருளால்தான் முடியும் என்பதை அறியலாம். முருகப்பெருமான் திருவடியை வேண்டினால் வேண்டிய அனைத்தையும் பெற்று வெற்றியை எளிதில் அடையலாம்.
ஆண்டியாம் முருகனை அன்புடன் பூஜிக்க
வேண்டிய அனைத்தும் விரைந்தே அருள்வான்.?
வயலூர் முருகனை வாழ்த்தி வணங்கிட
இயல்பான வாழ்வும் இன்பமும் உண்டாம்.