News
JANUARY 2025
குரு உபதேசம் 4271
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : ஞானசித்தர் காலம் தொடங்கி விட்டபடியினாலே ஞானசித்தர் ஆட்சியிலே பங்கு பெறுகின்ற வாய்ப்பை பெற்று, தொண்டு செய்திட வேண்டுமாயின் முருகப்பெருமானின் ஆசி பெற்றால்தான் பங்கு பெற முடியுமென்றும், ஞானசித்தர் காலத்திலே முருகனது அருளைப் பெற்று தொண்டுகள் செய்து ஆசி பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள ஆசி பெற வேண்டுமாயின், உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, ஜீவதயவை மேற்கொண்டு சுத்த சைவ உணவை மேற்கொண்டு தினம் தினம் மறவாமல், “ஓம் முருகா” என்றோ, “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றோ, “ஓம் சரவண பவ” என்றோ, தினம் தினம் காலை பத்து நிமிடமும், மாலை பத்து நிமிடமும், முடிந்தால் இரவு பத்து நிமிடமும் நாமஜெபமாகிய பூஜைகளை செய்து வருவதோடு மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தும் வரவர, முருகன் அருள்கூடி நாமும் ஞானியர் பெற்ற வாய்ப்பை பெறலாம்.
மாட்சிமை மிக்க மன்னவன் முருகனே
ஆட்சி புரிவன் அகிலம் செழிக்கவே.
முக்கண் மைந்தன் முருகனே நமக்கு
தக்கத் துணையென்றே சாற்றுவர் நல்லோர்.
இயன்ற அளவே ஏழைகளுக்கு அன்னம்
முயன்றே இடுவார் முக்தியும் பெறுவார்.