News
FEBRUARY 2025

குரு உபதேசம் 4321
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் :
அறம், பொருள், இன்பம், வீடுபேற்றினை அறிவதற்கும், அதை கடைப்பிடித்து வெற்றி பெறுவதற்கும் முருகப்பெருமானின் திருவடியே துணை என்று அறிகின்ற அறிவைப் பெறலாம்.
………………
காக்கும் குணவான் கந்தனை போற்றிட
ஆக்கமும் உண்டாம் அருளும் சித்திக்கும்.
சித்திக்கும் முருகனின் திருவடி போற்றிட
முத்தியும் உண்டாம் முனையும் திறந்திடும்.
சத்தியவான் முருகனின் தாளிணைப் போற்றிட
சித்தியும் முத்தியும் சிவகதி உண்டாம்.
உண்டாம் நல்வினை ஓதி உணர்ந்திட
கண்டவர் கண்ட கருத்து இதுவாகும்.
